Thursday, October 11, 2018

An attempt to save the life from lifestyles

Mrs. Jemi, Heavenly Angels, for DALY TEACHERS FOUNDATION
A man got up early in the morning and went to the temple to worship God. Stumble on the way he fell off.
As soon as the man who was torn by his knuckles dirty in his garment, he moved back to his house again and went back to the temple.
On the way he fell back in the same place where he fell. The man who returned again went back home to change his dress again and went back to the temple.
Then he saw someone standing in his hand with a lamp. He asked the man: 'Who are you, why are you standing here with a lamp?'
He said, 'I saw you fall twice in the way to the temple. So I will wait for you here to help you to help you.'
Going to the temple, he said, "Sir, you are someone who has come to help me. Thank you very much." Then they went to the temple.
The faithful man who went to the temple said to the man who helped him, "Come on! Come and eat some food and then worship God." The man refused. He told him how much the man refused to go in.
He said to the man, 'Why do you refuse to come in?' That man said, "I am Satan."
The loyal man who was shocked to hear it said, "You are Satan, why did you help me to go to the temple?" Satan said to him, "When I threw you down the first time, you did not murmur, but you went to your house and then went back to the temple, and God saw your faith and forgave your sins.
The second time again I dropped you down in the same place. But it did not minimize your curiosity.You go home again and change the dress and go to the temple. God saw the devotion of your devotion and forgot all the sins of your family.
I was afraid to see where you came down to the third time and go back to the temple to see that God will forgive the sins of your nation. "I have come to help you where you will fall, where you will fall."
Yes, my dear brothers and sisters who love Christ! The Bible says, "God is not unrighteous in forgetting the love of the love we showed for his name." Our faith, truth, justice, zeal, and obedience, our family, our nation will be protected, saved, and blessed.
So let's not get tired of our faith. May the Lord grant us all grace and by strength so that our faith will not pass away. Amen.
"Our Lord Jesus Christ is with you, the One who begins and ends the faith.
ஒரு மனிதர் அதிகாலையில் எழுந்து தேவனை ஆராதிக்க ஆலயத்துக்கு சென்றார். செல்லும் வழியில் இடறி கீழே விழுந்துவிட்டார்.
தட்டுத்தடுமாறி எழுந்தவர் தம் ஆடையில் அழுக்கு படிந்ததால் மீண்டும் தன் வீட்டிற்குச்சென்று ஆடையை மாற்றிக்கொண்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.
வழியில் அவர் தாம் விழுந்த அதே இடத்திலேயே மீண்டும் விழுந்துவிட்டார். திரும்பவும் எழுந்தவர் மீண்டும் தன் ஆடையை மாற்றும்படி வீட்டிற்குச் சென்று மாற்றிக்கொண்டு திரும்பவும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டார்.
அப்போது வழியில் ஒருவர் தம் கையில் விளக்குடன் நிற்பதைக் கண்டவர். 'யார் நீங்கள், ஏன் இங்கு கையில் விளக்குடன் நிற்கிறீர்கள்' என்று அந்த மனிதனிடம் கேட்டார்.
அதற்கு அந்த மனிதன், 'நீங்கள் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் இருமுறை கீழே விழுந்ததை பார்த்தேன்.ஆகையால் உமக்கு உதவுவதற்காக நான் இங்கு கையில் விளக்குடன் உமக்காக காத்திருக்கிறேன்' என்றான்.
ஆலயம் செல்ல புறப்பட்டவரோ, "ஐயா, தாங்கள் யாரோ, எவரோ எனக்காக உதவும்படி வந்திருக்கிறீரே.மிகவும் நன்றி" எனக் கூறினார். பின்பு இருவரும் ஆலயத்துக்குச் சென்றார்கள்.
ஆலயத்துக்குள் சென்ற விசுவாசமுள்ள மனிதர் தனக்கு உதவிய மனிதனை நோக்கி, "நீங்களும் உள்ளே வாருங்கள்! சிறிது உணவருந்திவிட்டு பின்பு தேவனை ஆராதிப்போம்" என்றார். அதற்கு அந்த மனிதன் மறுத்துவிட்டான். இவர் எவ்வளவோ சொல்லியும் அந்த மனிதன் உள்ளே செல்வதற்கு மறுத்துவிட்டான்.
இவரோ அந்த மனிதனை நோக்கி, 'ஏன் நீங்கள் உள்ளேவர மறுக்கிறீர்கள்' என்று கேட்டார்.அதற்கு அந்த மனிதன், "நான் தான் சாத்தான்" என்றான்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விசுவாசமுள்ள மனிதர், "நீதான் சாத்தானா, பின் ஏன் நீ ஆலயத்துக்குச் செல்ல எனக்கு உதவி செய்தாய்" எனக்கேட்டார்.
அதற்கு சாத்தான்,"நான் உன்னை முதல்தரம் கீழே விழச் செய்தபோது நீ முறுமுறுக்காமல் உன் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிவிட்டு மீண்டும் ஆலயத்துக்குச் செல்லப் புறப்பட்டாய். உன் விசுவாசத்தைக் கண்ட தேவன்,'உன் பாவங்களையெல்லாம் மன்னித்தார்'.
இரண்டாவதுமுறை உன்னை மீண்டும் அதே இடத்தில் கீழேவிழச் செய்தேன். ஆனால் அது உன் ஆர்வத்தை குறைக்கவில்லை.நீ மீண்டும் வீட்டிற்குச் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு ஆலயத்துக்குச் செல்ல புறப்பட்டாய். உன் பக்தி வைராக்கியத்தைக் கண்ட தேவன், "உன் குடும்பத்தாரின் பாவங்களையெல்லாம் மன்னித்தார்".
அதைக் கண்டு பயந்த நான், எங்கே நீ மூன்றாவது முறையும் கீழே விழுந்து மீண்டும் ஆலயத்துக்குச் செல்வதை தேவன் பார்த்து அதினிமித்தம் உன் தேசத்தாரின் பாவங்களை மன்னித்துவிடுவாரோ என பயந்துதான் "நான் தள்ளிவிடாமல் எங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்று உனக்கு உதவிசெய்ய கையில் விளக்குடன் வந்தேன்"என்றான்.
ஆம், கிறிஸ்துவுக்கு பிரியமான என் அன்பு சகோதர,சகோதரிகளே! "தமது நாமத்திற்காக நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதுக்கு தேவன் அநீதியுள்ளவரல்ல" என வேதம் அறுதியிட்டு கூறுகின்றது. நமது விசுவாசம், உண்மை,நீதி, பக்திவைராக்கியம், கீழ்படிதலினிமித்தம் நம் குடும்பம்,நம் தேசம் பாதுகாக்கப்படும்,இரட்சிக்கப்படும், ஆசீர்வதிக்கப்படும்.
ஆகையால் நாம் விசுவாசத்தில் சோர்ந்து போகாமல் இருப்போமாக.  கர்த்தர் தாமே நம் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு நம் யாவருக்கும் கிருபையையும்,பெலத்தையும் தந்தருளுவாராக.ஆமென்.
"விசுவாசத்தை துவக்குகிறவரும் அதை முடிக்கிறவருமாகிய நம் ஆண்டவராகிய 'இயேசுகிறிஸ்து' உங்களோடுகூட இருக்கிறார்.." 

No comments:

Post a Comment